முல்லைத்தீவு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

#SriLanka #people #government #Road #Mullaitivu #pillaiyan #Visit
Prasu
1 year ago
முல்லைத்தீவு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சு பதவியினை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். குறித்த மக்கள் சந்திப்பில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

images/content-image/1711731185.jpg

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதியினை புனரமைத்து தருவதாகவும் மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1711731196.jpg

images/content-image/1711731205.jpg

images/content-image/1711731215.jpg

images/content-image/1711731226.jpg

images/content-image/1711731237.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!