அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகள் இன்று (29.03) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் அனுராதபுரம் ஷ்ரவஸ்திபுர பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மற்றைய கைதி களனி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 02 மாத சிறைத்தண்டனையும் மற்றைய நபருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பியோடிய கைதிகளை கைது செய்யும் நடவடிக்கையை சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



