ஸ்ரீ பாத குன்றின் மீது ஏறிய இளைஞருக்கு நேர்ந்தக் கதி!
#SriLanka
#Accident
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இரத்தினபுரி - ஸ்ரீ பாத வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாதுகாப்பு வேலியில் சற்று தொலைவில் அமைந்துள்ள குன்றொன்றில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் பாரத் சந்திரதாஸ் என்ற 25 வயதுடைய இளைஞரே காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்க அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த இளைஞர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நல்லதண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களுடன் வந்தவர்களை நல்லதண்ணியாவிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.