ஈஸ்டர் தினம் : பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
ஈஸ்டர் தினம் : பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு ஆகிய நாட்களில் ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் உள்ள 2,978 கிறிஸ்தவ தேவாலயங்களில் 2,230 தேவாலயங்களில் ஈஸ்டர் ஆராதனைகள் நடைபெறவுள்ளதுடன், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. 

அதற்காக 6,837 பொலிஸ் அதிகாரிகளும், 464 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும், 2,882 இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் நடமாடினால் அவர்கள் குறித்து அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 119, 118 மற்றும் 1927 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.