மருதமுனை இரட்டை படுகொலையில் சந்தேக நபரான தந்தைக்கு விளக்கமறியல்

#SriLanka #Arrest #Murder #Prison #Kalmunai #Father
Prasu
1 year ago
மருதமுனை இரட்டை படுகொலையில் சந்தேக நபரான தந்தைக்கு விளக்கமறியல்

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு தொடர்பில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அப்பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

 குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 63 வயதுடைய குறித்த சம்பவத்தில் மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!