முல்லைத்தீவிற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார் சிவநேசதுறை சந்திரகாந்தன்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (28.03) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அம்பலவன் பொக்கணைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்றதுடன், இரட்டைவாய்க்கால் - மாத்தளன் சாலை வீதி புனரமைப்பு தொடர்பில் நேரடியாக பார்வையிட்டதோடு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த கள விஜயத்தின்போது கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், கிராம அலுவலகர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.