அமெரிக்காவில் விபத்துக்குள்ளான பாலம் : இருவரின் உடல்கள் கண்டுப்பிடிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அமெரிக்காவில் விபத்துக்குள்ளான பாலம் : இருவரின் உடல்கள் கண்டுப்பிடிப்பு!

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் உள்ள பாலத்தில் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர்  கண்டறிந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த விபத்தில் ஏறக்குறைய ஆறு பேர் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேரின் உடல்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். 

பாலத்தின் இரும்பு மற்றும் கான்கிரீட் ஆற்றுப்படுகையில் சிதறிக் கிடப்பதால் தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. 

எனவே காணாமல் போன ஏனையவர்களின் சடலங்களை கண்டறிவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!