தெற்கு பெருவில் விபத்துக்குள்ளான பேருந்து - 37 பேர் பலி!
தெற்கு பெருவில் நேற்று அதிகாலை ஒரு பயணிகள் பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதிய பின்னர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரேக்விபா பிராந்தியத்தின் சுகாதார மேலாளர் வால்தர் ஓபோர்டோ உள்ளூர் வானொலி RPP இடம், பேருந்து ஒரு பிக்கப் டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.
தெற்கு பெருவில் உள்ள சுரங்கப் பகுதியான சாலா நகரத்திலிருந்து பேருந்து புறப்பட்டு அரேக்விபா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பெருவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பேருந்து விபத்துக்கள் அசாதாரணமானது அல்ல.
விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த நிகழ்வுகளில் பலவற்றிற்கு பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிக வேகம் காரணமாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
