கொழும்பில் டயர் கடை ஒன்றில் பாரிய தீ விபத்து!
#SriLanka
#Colombo
#fire
Mayoorikka
1 year ago

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் இன்று தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியானது புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பற்றியெரியும் தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.



