வலி வடக்கில் விடுவிக்கப்படாது மீதமிருக்கும் காணிகளும் விடுவிக்கப்படும்! டக்ளஸ்

#SriLanka #Douglas Devananda #Jaffna
Mayoorikka
1 year ago
வலி வடக்கில் விடுவிக்கப்படாது மீதமிருக்கும் காணிகளும்  விடுவிக்கப்படும்! டக்ளஸ்

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மீதமிருக்கும் மக்களின் காணிகளையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அவை அனைத்தும் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இன்று நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

 மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.

 இதில் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண அவைத் தலைவர் கே.வி.சிவஞ்ஞானம், பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!