வவுனியாவில் கோர விபத்து: முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உயிரிழப்பு
#SriLanka
#Vavuniya
#Death
#Accident
#doctor
#Mullaitivu
Mayoorikka
1 year ago
வவுனியா ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தானது இன்று மாலை இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
