நாடளாவிய ரீதியில் 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இச்சோதனைகளின் போது, பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்ட பல உணவு மாதிரிகள் சுவைப் பரிசோதகர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பொதுமக்கள் பண்டிகைக் காலத்துக்கான உணவுகளை வாங்க வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரிக்கக் கொடுக்கப்படும் பொருட்கள், பண்டிகைக் காலத்துக்காக விளைவிக்கப்படும் உணவு வகைகள், பழங்கள் ஆகியவற்றை சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.