கென்யாவில் உணவகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் நால்வர் பலி
#Death
#Food
#BombBlast
#shop
#Kenya
Prasu
1 year ago
வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேரா நகரில் உள்ள போலீஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் திடீரென வெடிகுண்டு வெடித்தது.
இந்த விபத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு வெடித்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மண்டேரா போலீஸ் தலைமை அதிகாரி சாம்வெல் தெரிவித்துள்ளார்.