ரஷ்ய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

#India #PrimeMinister #Election #Russia #Putin #President #NarendraModi
Prasu
1 year ago
ரஷ்ய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

ரஷ்யாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார். அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். 

இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் அதிபராக நீடிப்பார். இந்நிலையில், ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்குகிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!