படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்ற இலங்கை குடும்பஸ்தர் கைது!

#SriLanka
Mayoorikka
1 hour ago
படகு  மூலம் தமிழ்நாட்டிற்கு சென்ற இலங்கை குடும்பஸ்தர் கைது!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

 தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரித்தனர்.

 அப்போது அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்த மரைன் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சூசை தாசன் என்பது தெரியவந்தது.

 இதையடுத்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் சென்றதன் காரணம் குறித்து மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!