கார்த்திகை வாசம்: நல்லூரிற்கு வரும் தொல். திருமாவளவன்

#SriLanka #Nallur
Mayoorikka
1 hour ago
கார்த்திகை வாசம்: நல்லூரிற்கு வரும் தொல். திருமாவளவன்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சி யாழ்ப்பாணம் - நல்லூர் கிட்டு பூங்காவில் நாளைமறுதினம் பிற்பகல் 3.00 மணிக்குஆரம்பமாகவுள்ளது.

 இந்தத் தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருளமாவவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

 தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கின்றார்.

 தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

 தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சி இந்த மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

 கண்காட்சியைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!