ரஷ்யாவில் ஐந்தாவது முறையாக ஆட்சியமைக்கும் புட்டின்!
#SriLanka
#Russia
#Putin
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி புட்டின் ஐந்தாம் தடவையாகவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட காலம் ரஷ்யாவில் ஜனாதிபதி பொறுப்பிலிருக்கும் தலைவர் என்ற பெருமை விளாடிமீர் புட்டின் பெற்றுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.



