TikTok நிறுவனத்துக்கு 10 மில்லியன் யூரோ அபராதம் விதித்த இத்தாலி
#government
#Social Media
#Germany
#TikTok
#Fined
Prasu
1 year ago

TikTok நிறுவனத்துக்கு 10 மில்லியன் யூரோ அபராதம் விதிப்பதற்கு இத்தாலியின் போட்டி ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
TikTok சிறார்களைப் போதுமான அளவு பாதுகாக்கத் தவறிய காரணத்தினால் அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
செயலியில் சிறார்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் காணொளிகள் மீண்டும் அவர்களிடம் தோன்றும் சாத்தியம் ஏற்படுவதாக ஆணையம் கூறியது. அதற்குக் காரணம் TikTok பயன்படுத்தும் தொழில்நுட்பம்.
TikTok பின்பற்றப்போவதாக உறுதியளித்த பாதுகாப்பு விதிமுறைகளை அது பின்பற்றவில்லை என்று ஆணையம் கூறியது.
பிள்ளைகளுக்கு உண்மையைக் கற்பனையிலிருந்து வகைப்படுத்தத் தெரியாது, பரவலாகப் பின்பற்றப்படும் போக்கை அவர்களும் பின்பற்றும் சாத்தியம் இருக்கிறது.



