அரசியலில் களமிறங்குகிறாரா இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ்?
#SriLanka
#Sajith Premadasa
#United National Party
#Cricket
#Player
#Politics
Prasu
1 year ago

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இவர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சஜித் உடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ராஜபக்ஷ தரப்பின் பிரச்சார நடவடிக்கைகளிலும் பங்கேற்றிருந்த அவர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான கிரிக்கட் அணியில் சமிந்த வாஸ் இடது கை வேகப் பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



