நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ள தாமரைக்கோபுரம்: காரணம் என்ன?
#SriLanka
#Colombo
#lotus tower
Mayoorikka
1 year ago

கொழும்பு தாமரை கோபுரம் பெப்ரவரி 22ஆம் திகதியன்று சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.
உலக மூளையழற்சி தினமான பெப்ரவரி 22ஆம் திகதியன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறு ஒளிரவிடப்படவுள்ளது. இந்த பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் தற்போதைய பணியின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகின்றது.
கொழும்பு தாமரை கோபுரம் உலகெங்கிலும் உள்ள பல சர்வதேச அடையாளங்களுடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்கும்.



