பொதுஜன பெரமுனவில் இணைகின்றாரா பொன்சேகா? நாமல் வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #Namal Rajapaksha #Sarath Fonseka #SLPP
Mayoorikka
1 year ago
பொதுஜன பெரமுனவில் இணைகின்றாரா பொன்சேகா? நாமல் வெளியிட்டுள்ள தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரும்பினால் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

 கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி விகாரைக்கு வழிபாடுகளுக்காக நேற்று (20) சென்றிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவும் 45 ஆண்டு காலமாக எதிரெதிர் அரசியல் முகாம்களில் செயற்பட்டவர்கள். ஆனால் நாங்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். 

 சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்.

 அந்த வகையில் அவர் பொதுஜன பெரமுணவில் இணைந்து கொள்ள விரும்பினால் எமது கதவுகள் என்றும் திறந்தே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!