ஹட்டன் பேருந்து நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஹட்டன் லங்காம பஸ் நிலையத்தில் பல நாட்களாக தங்கியிருந்த ஒருவர் இன்று (19.02) அதே பஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 65-70 வயதுடையவர் எனவும், அவர் பஸ் நிலையப் பகுதியில் தங்கியிருந்தவர் எனவும், அவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் காலை வேளையில் நிலவிய கடும் குளிரான காலநிலை காரணமாக பஸ் நிலையத்தில் தங்கியிருந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை திக் ஓயா சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.