கடந்த சில மாதங்களாக இலங்கையின் மின் தேவை அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #ElectricityBoard
Dhushanthini K
1 year ago
கடந்த சில மாதங்களாக இலங்கையின் மின் தேவை அதிகரிப்பு!

கடந்த சில மாதங்களை விட மின்தேவை அதிகரித்துள்ளதாக மின்சார சபை இன்று (19.02) தெரிவித்துள்ளது.  

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மின்சார சபையின்  பேச்சாளரான பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி மாதத்தில் கடந்த சில நாட்களாக 46 கிகாவாட் மணித்தியால மின்சார தேவை பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  

இதன்காரணமாக மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தும் போது முடிந்தவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர்  நோயல் பிரியந்த மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!