மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்தில் முன்வைக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் 'பாரத்-லங்கா' வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்ட ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (19) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதி இதனைக் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!