சுகாதார தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை ஆராய விசேட குழு!

#SriLanka #Health #Hospital #Health Department
Mayoorikka
1 year ago
சுகாதார தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை ஆராய விசேட குழு!

சுகாதார தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

 இதன்படி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நாளை செவ்வாய்க்கிழமை (20) கூடி இது தொடர்பில் ஆராயவுள்ளனர்.

 சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுக்கும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்குமிடையில் இன்று திங்கட்கிழமை (19) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்தக் குழுவை நியமித்தார்.

 இன்றைய இந்தக் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, மேலதிக செயலாளர்களான கீதாமணி கருணாரத்ன, வத்சலா பிரியதர்ஷனி உட்பட சுகாதார நிபுணத்துவ தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!