நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கும் முயற்சி சதி வேலை: ஜேவிபி

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தற்போது இடம்பெறும் முயற்சிகளிற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தற்போது இடம்பெறும் முயற்சிகளை சதி என அந்த கட்சி வர்ணித்துள்ளது.
எனினும் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைநீக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தற்போது இடம்பெறும் முயற்சிகளை ஒரு சதி என வர்ணித்துள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் இதனை தோற்கடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்காக இடம்பெறுகின்ற முயற்சிகள் ஒரு ஏமாற்றுவித்தை என குறிப்பிட்டுள்ள விஜிதஹேரத் அரசாங்கத்திற்கு இதனை முன்னெடுப்பதற்கு போதுமான காலஅவகாசம் இருந்தும் அதனை முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேசியமக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவோம் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் தற்போது இதற்கு ஆதரவளிக்கமாட்டோம் இதுவே எங்கள் நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.



