இலங்கை வருகின்றார் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுசைன்!
#SriLanka
#Airport
#Iran
#Visit
Mayoorikka
1 year ago

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இன்று (19) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார்.
அவருடன் அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் எரிசக்தி மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த குழுவினர் எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.



