ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று (19.02) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 42 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடங்கும் மாநாடு வரும் 22ம் திகதிவரை நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கியூ டோங்யு உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் இந்த மாநாட்டில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.