கொழும்பு வைத்தியசாலையொன்றில் பணிப்புறக்கணிப்பில் இறங்கிய ஊழியர்கள்!
#SriLanka
#Colombo
#Hospital
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அமுல்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பின் போது கலாநிதி ருக்ஷான் பெல்லான கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே அவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் நேற்று (16.02) டொக்டர் ருக்ஷான் பெல்லனவை அவரது அலுவலகத்தில் வைத்து பலவந்தமாக தடுத்து வைத்தனர்,
சுமார் 06 மணித்தியாலங்களின் பின்னர் அவர் பாதுகாப்பு தரப்பினரின் தலையீட்டுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.