கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!
#water
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று (17.02) மாலை 05 மணி முதல் நாளை (18.02) காலை 09.00 மணிவரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தல நீர் வழங்கல் மேம்படுத்தல் எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.



