ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாடு : 35 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (17.02) இலங்கை வரவுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டின் ஏற்பாடு தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் நேற்று (16.02) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 35 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகமும் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த மாநாட்டில் சீனா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல நாடுகளின் விவசாய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் ஆரம்ப அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கையில் அதிகளவான அரச பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடாக இது அமையும் என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



