மோதர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : தாக்குதல்தாரி பயன்படுத்திய கார் மீட்பு!

மோதர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறித்த கார் இன்று (14) பிற்பகல் ஒதே கலே பகுதியில் தனித்து விடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரை சோதனையிட்டபோது அதில் இருந்து இரு துப்பாக்கிக் குண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காரின் சேஸ் நம்பர் மற்றும் என்ஜின் எண் ஆகியவை நீக்கப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். போலி இலக்கத் தகடுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்த வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை மோதரையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த உணவகத்தின் உரிமையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



