காட்டிற்குள் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு!

#SriLanka #Death #Mullaitivu #BombBlast
Mayoorikka
1 year ago
காட்டிற்குள் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு!

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.

 தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தரான ஆறுமுகத்தான் குளத்தினை 48 அகவையுடைய சேர்ந்த துரைராசா ஆனந்தராசா என்பவரே துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 வேட்டைக்கு சென்ற குறித்த நபர் காட்டிற்குள் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் எடுத்துவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 இவர் பயன்படுத்திய சட்டவிரேத துப்பாக்கி மற்றும் உயிரிழந்தவரின் உடலம் தண்ணிமுறிப்பு குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!