யுக்திய நடவடிக்கை - 759 பேர் கைது
#SriLanka
#Arrest
#Police
#island
#drugs
#search
Prasu
1 year ago

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 759 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 549 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 210 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 210 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 188 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



