ஆரம்ப பாடசாலை ஒன்றில் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம்! வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #School #Hospital #School Student
Mayoorikka
1 year ago
ஆரம்ப பாடசாலை ஒன்றில் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம்! வைத்தியசாலையில் அனுமதி

வெல்லவாய, மல்வத்தாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர். 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர். 

 இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!