உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி!

#SriLanka #government #Ali Sabri
Mayoorikka
1 year ago
உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி!

உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

 மனித உரிமைகளிற்கான அமைச்சுகள் இடையிலான குழுவின் ஆரம்பஅமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 ஐக்கியநாடுகளுடன் ஈடுபாட்டை தொடரும் அதேவேளை உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மனித உரிமைகள் குறித்த அமைச்சுகள் மத்தியிலான நிலையில் குழுவை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளமை மனித உரிமைகளை உறுதி செய்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அரசாங்கம் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இறைமையை பாதுகாக்கும் அதேவேளை உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மனித உரிமைகள் விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைவதற்கு அரசாங்கம் முயலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!