மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 04 கொள்கலன்களால் அரசாங்கத்திற்க பாரிய நஷ்டம்!

#SriLanka #Malasia #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 04 கொள்கலன்களால் அரசாங்கத்திற்க பாரிய நஷ்டம்!

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான 4 கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.  

துணியாக இறக்குமதி செய்யப்பட்ட அந்த 40 அடி கொள்கலன்களில் 44,000 ஆயத்த ஆடைகள் இருந்தன. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 60 மில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இதன் மொத்த பெறுமதி சுமார் 150 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்தளை, கொழும்பு மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 03 ஆடை நிறுவனங்களினால் இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

மேலும், மேலும் 02 கொள்கலன்கள் அரிசி எனக் கூறி சுங்க அதிகாரிகளை தவறாக வழிநடத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 12,688 கிலோகிராம் உந்துவை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.  

இதன் சந்தைப் பெறுமதி 8.8 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு 3.8 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் இந்தக் கொள்கலன்களை அவதானிக்க வந்திருந்தார். இந்த சரக்குகள் அனைத்தையும் பறிமுதல் செய்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!