5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வாய்ப்பு!
#SriLanka
#Student
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

2023 ஆம் ஆண்டிற்கான 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை இப்போது ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்கள் 2024 ஆம் ஆண்டு தரம் 6 இல் சேர்க்கைக்காக 2024. 02. 13 முதல் 2024. 02. 29 வரை ஆன்லைனில் தங்கள் முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கான முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



