பெட்ரோலிய சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தம் கைச்சாத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#petrol
Dhushanthini K
1 year ago

Shell-RM Parks Company மற்றும் Ceylon Petroleum Storage Terminal Company ஆகியவை பெட்ரோலிய சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் இன்று (12) கொலன்னாவையில் உள்ள லங்கா பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இதன்படி, நாட்டில் ஷெல்-ஆர்எம் பார்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்களை சேமித்து வைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் சிலோன் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்திற்கு ஏற்பாடுகள் வழங்கப்படும்.
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி இது தொடர்பான முன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



