இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Court
Dhushanthini K
1 year ago

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (12.02) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த இந்த மனு, காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் மனு மீதான விசாரணை நாளை (13.02) ஒத்திவைக்கப்பட்டது.



