பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: முக்கிய கட்சி ஒன்று விடுத்துள்ள அறிவிப்பு

#SriLanka #Sri Lanka President #United National Party
Mayoorikka
1 year ago
பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: முக்கிய கட்சி ஒன்று விடுத்துள்ள அறிவிப்பு

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்துகொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட சம்மேளனம் நேற்று யக்கல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள முடியாமல் இல்லை. ஏனெனில் ரணில் விக்ரமசிங்க இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிக்கொள்ள முடியாது என தெரிவித்தே அவர்கள் கட்சியை விட்டுச் சென்றார்கள். 

 எவ்வாறாவது முரண்பாடு பிரிந்து ஐக்கியம் ஒன்றுபடும்போது நாங்கள் எங்களது ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிக்கொண்டோம். ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை உலக சாதனையாகும்.

 எதிர்காலத்தில் இதுதொடர்பாக புத்தகமும் எழுதப்படும். எவ்வாறு ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடியும் என ஆராய அது உலகில் அரசியல் செய்பவர்களுக்கு ஆய்வு புத்தகமாக இருக்கலாம். என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!