ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் பல பிரிவுகளை திருத்த நடவடிக்கை!

ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் பல பிரிவுகள் திருத்தப்பட உள்ளன.
அதன்படி, இது தொடர்பான 47 திருத்தங்கள் இன்று (12.02) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த திருத்தங்களை பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸினால் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை கருத்திற் கொண்டு இந்த சரத்துகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த திருத்தங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், எதிர்வரும் பாராளுமன்ற நாட்களில் முதல் வாசிப்பு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், ஆன்லைன் சட்டத்தின் பல பிரிவுகள் எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



