சமூக ஊடகத்தில் பிரச்சாரம்: முதன்முதலாக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

#SriLanka #Arrest #government #Social Media
Mayoorikka
1 year ago
சமூக  ஊடகத்தில் பிரச்சாரம்: முதன்முதலாக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

பணத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் முதன் முதலாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த சந்தேக நபர் டொலரை மாற்றும் போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

 கைது செய்யப்பட சந்தேக நபரிடம் இருந்து 400,000 ரூபா கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த நபர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 இவ்வாறான சம்பவங்களை தடுக்கும் வகையிலே நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மாத்திரம் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் பிரச்சினையாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!