மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு - யாழில் துயரம்!(வீடியோ இணைப்பு)
#SriLanka
#Sri Lanka President
#Death
#Lanka4
Mayoorikka
1 hour ago
யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்னி இன்று உயிரிழந்துள்ளார்.
அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றையதினம் தாவடி பகுதியில் 2வது மாடியில் வேலை செய்தபோது அங்கிருந்து தவறி முதலாவது மாடியில் விழுந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
