சிரியா மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் ஒரு மூலோபாய தவறு : ஈராக் விமர்சனம்!
#SriLanka
#War
#Iraq
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் ஒரு மூலோபாய தவறு என்று ஈரான் கூறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள 85 இலக்குகளை அமெரிக்கா தாக்கியது. ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்கள் அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதாக வெள்ளை மாளிகை கூறியது,
அதில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், அந்த தாக்குதல்களால் பிராந்தியத்தில் பதற்றம் மற்றும் ஸ்திரமின்மை தவிர வேறெதுவும் ஏற்படாது என்றார்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



