யாழ்ப்பாணத்தில் வாளுடன் பொலிசாரை துரத்திய இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற திகில் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போதைப்பொருள் வேட்டையில் ஈடுபட்டிருந்த பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய இளைஞன், இறுதியில் பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது உடைமையிலிருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நாவற்குழி பகுதியில் மற்றொரு இளைஞனும் போதைப்பொருள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி பொலிசார் அங்கு சென்றபோது, அந்த இளைஞன் திடீரென வாளை எடுத்து பொலிசாரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வேகமாக செயல்பட்ட பொலிசார், வாளுடன் இருந்த இளைஞனை மடக்கி பிடித்து, அவரது உடைமையிலிருந்தும் போதைப்பொருள் மீட்டுள்ளனர்.
தற்போது இரு இளைஞர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.
------------------------------------------------------------------------------------
A horrific incident that took place in the Chavakachcheri area of Jaffna has shocked everyone.
A youth who threatened police officers who were engaged in a drug hunt with a sword was eventually caught by the police.
A youth was arrested on charges of possessing heroin in the Chavakachcheri area, and drugs were also recovered from his possession.
Based on the inquiries conducted on him, it was reported that another youth in the Nawatkuzhi area was also in possession of drugs. Accordingly, when the police went there, it is reported that the youth suddenly took out a sword and threatened the police.
However, the police acted quickly and caught the youth with the sword and recovered drugs from his possession.
Currently, both youths are detained at the police station and an investigation is underway.
------------------------------------------------------------------------------------
යාපනයේ චාවකච්චේරි ප්රදේශයේ සිදු වූ බිහිසුණු සිදුවීමක් සියල්ලන්ම කම්පනයට පත් කර තිබේ.
මත්ද්රව්ය දඩයමක යෙදී සිටි පොලිස් නිලධාරීන්ට කඩුවක් අතැතිව තර්ජනය කළ තරුණයෙකු අවසානයේ පොලිසියට හසු විය.
චාවකච්චේරි ප්රදේශයේදී හෙරොයින් ළඟ තබා ගැනීමේ චෝදනාව මත තරුණයෙකු අත්අඩංගුවට ගත් අතර, ඔහු ළඟ තිබී මත්ද්රව්ය ද සොයා ගන්නා ලදී.
ඔහු සම්බන්ධයෙන් සිදු කරන ලද පරීක්ෂණවලට අනුව, නවට්කුෂි ප්රදේශයේ තවත් තරුණයෙකු ද මත්ද්රව්ය ළඟ තබාගෙන සිටි බව වාර්තා විය. ඒ අනුව, පොලිසිය එහි ගිය විට, තරුණයා හදිසියේම කඩුවක් එළියට ගෙන පොලිසියට තර්ජනය කළ බව වාර්තා වේ.
කෙසේ වෙතත්, පොලිසිය ඉක්මනින් ක්රියාත්මක වී තරුණයා කඩුව සමඟ අල්ලා ඔහු ළඟ තිබූ මත්ද්රව්ය සොයා ගත්තේය.
මේ වන විට තරුණයන් දෙදෙනාම පොලිස් ස්ථානයේ රඳවා තබා ඇති අතර පරීක්ෂණයක් සිදුවෙමින් පවතී.
(வீடியோ இங்கே )