ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிக்க வேண்டாம்” – பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

#SriLanka #Police #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
59 minutes ago
ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிக்க வேண்டாம்” – பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

வீதிப் போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்தும் போது, பொலிஸ் அதிகாரிகள் மறைவான இடங்களில் ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விபத்துகளைத் தடுப்பது மற்றும் சாரதிகளுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

மேலும், போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும் இடங்களில் கடமையில் ஈடுபடுவதன் மூலம், விதிமீறல்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4