பொலிஸ் நவீனமயமாக்கல் – போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களை விரைவுபடுத்த ஜனாதிபதி பணிப்பு!

#SriLanka #Police #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
பொலிஸ் நவீனமயமாக்கல் – போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களை விரைவுபடுத்த ஜனாதிபதி பணிப்பு!

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் 2026 திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவு–செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1,000 மில்லியன் நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு, சுற்றிவளைப்பு, புனர்வாழ்வு மற்றும் ஆலோசனைத் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும், பொலிஸ் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்கள், புதிய வாகனங்கள், டிஜிட்டல் மயமாக்கல், புதிய சீருடைகள், பொலிஸ் மருத்துவமனை அபிவிருத்தி மற்றும் அதிகாரிகளின் நலன்புரி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

பொலிஸ் சேவையை நவீனமயமாக்கி பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்குவதுடன், போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4