நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், நுண்கடன் துறையில் அதிகளவு பயன்பெறுவது பெண்களே என்றும் சுட்டிக்காட்டினார். 

 சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உத்தரவாத முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிடுகின்றார்.  

இதேவேளை, தேசிய சேமிப்பு வங்கிக்கு சொந்தமான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அனைத்து வர்த்தகர்களும் வற் வரி செலுத்தினால் தற்போதுள்ள பதினெட்டு வீதமான வட் வரியை 15 வீதமாக குறைக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!