இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றால் இலங்கைக்கு பாதிப்பு!

#India #SriLanka #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றால் இலங்கைக்கு பாதிப்பு!

இந்தியாவில் இருந்து பரவலடைந்து வரும் மாசடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று தோற்றமளிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “புது டெல்லியில் இருந்து காற்றோட்டமானது ஒரு வட்ட இயக்கத்தில் பரவலடைந்து வருகின்றது. 

அது டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து சுழன்று செல்லும் இந்த காற்று கிழக்கு மாகாணத்தின் ஊடாக இலங்கைக்குள் நுழைகிறது. 

images/content-image/1705480510.jpg

இது இலங்கையின் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. விரைவில் காற்றுடன் சிறிது ஈரப்பதமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் விளைவாக சிறிதளவில் மழை பெய்யும். 

இதனால் மூடுபனி குறையும். இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து மேலும் காற்றோட்டம் இருக்கும் என்று தெரிகிறது. தற்போது இலங்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நுவரெலியாவில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் திணைக்களம் உறுதியளித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நேற்று மாலை நிலவரப்படி 6 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னாரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை அண்டி ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக காற்று மாசமடைதல் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், குறித்த பகுதிகளில் தற்போது மனித சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!